தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பின்படி நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழைப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம்பவானிசாகர் அணை நீர்மட்டம் 83.09 அடியாக உள்ளது. நீர் இருப்பு 17.3 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 458 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 955 கனஅடியாக உள்ளது. வரும் ஜூன் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் காரைக்கால் பகுதிகளில்கனமழைக்குபெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.