Skip to main content

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 08/06/2025 | Edited on 08/06/2025
Rain alert for 10 districts

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை `10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பின்படி  கோவை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், மயிலாடுதுறை என 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்