jkl

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், புழல், ஆவடி, பட்டாபிராம், மாம்பலம், சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா, பெசன்ட் நகர், மயிலாப்பூர், அண்ணா நகர், கேளம்பாக்கம், அண்ணா சாலை, எண்ணூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத்துவங்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக மழை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் மழைபெய்து வருகிறது.