Rain in 9 districts in Tamil Nadu by 10 am

Advertisment

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கேரள கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விருதுநகர், தேனி என இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.