Rain in 9 districts for the next three hours!

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழைப்பொழிவு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கன அடியாக உயர்ந்திருந்த நிலையில், ஏரியிலிருந்து 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாகவும், நீர் இருப்பு 3540 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது.