Rain in 31 districts- Meteorological Department warns

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 31 இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (21.11.2023) மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.