தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

RAIN

Advertisment

குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம், சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைபெய்யும். அதேபோல் லட்சதீவு, மாலத்தீவு, மன்னார்வளைகுடா, தெற்குவாங்கக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்கள் தமிழகத்திற்கு மழை வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக அரியலூரில் 9 சென்டிமீட்டர் மழையும், திருவண்ணாமலையில் 8 சென்டிமீட்டர் மழையும், விழுப்புரத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Advertisment