தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை

Rain in 25 districts of Tamil Nadu in next 3 hours

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று (4.11.2023) மிகக்கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மிதமானதுமுதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல்உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe