அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை

Rain in 22 districts in next 3 hours

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இன்று பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, வடபழனி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், வேலூர், தேனி,தருமபுரி,திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி,சேலம்,விழுப்புரம்,திருவண்ணாமலை, நாமக்கல்,புதுக்கோட்டை,திருச்சி,கரூர் ஆகிய மாவட்டங்களிலும்விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe