Skip to main content

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

bb

 

தமிழகத்தில் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், தர்மபுரி, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் பல இடங்களில் இடியுடன் கனமழை பொழிந்து வருகிறது. சென்னை மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி நகர், பட்டினம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், தாம்பரம், சேலையூர், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இடியுடன் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் காஞ்சிபுரத்திலும் ஓரிக்கை, களக்காட்டூர், நந்தம்பேட்டை, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. கோவையில் உக்கடம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், காந்திபுரம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்