Advertisment

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 2 நாட்களுக்கு மழை!

வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதியகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

Rain for 2 days... Meteorological Department Announcement

கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் சாதக போக்கால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்2 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னையில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில் சேலம் மாவட்டம்ஓமலூரில் 4 சென்டிமீட்டர் மழையும், பள்ளிப்பட்டு, சோழவரம், செம்பரம்பாக்கம், திருவாலங்காட்டில் 3 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.

omalur Chennai dndigul Theni weather rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe