அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை

Rain in 12 districts in next 3 hours

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe