
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மழையினால் தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணை 3,381 அடி கன அடி கொள்ளளவைப்பெற்றுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.446 கன அடியிலிருந்து 3,381 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் 104.41 அடியாகவும், நீர் இருப்பு 32.3 டி.எம்.சி.யாகவும், நீர் வெளியேற்றம் 1000 கன அடியாகவும் இருக்கிறது.
Follow Us