Advertisment

ரயில்வே ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்! 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டன, பல தொழிலாளர் அமைப்புகள் வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் பல இயக்கங்கள் சார்பில் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

Advertisment

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, மத்திய அரசைக் கண்டித்து சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் 'சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு)’ சார்பில் சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் தலைமையில் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

protest railway Farmers Protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe