Advertisment

ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சஸ்பெண்ட்

Railway Signal Control Room Manager suspended

மயிலாடுதுறையில் ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஏற்கனவே ஒடிசா மற்றும் ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளுக்கு சிக்னல் கோளாறுகளே காரணம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்று முதலாவது நடைமேடைக்கு மைசூர் விரைவு ரயில் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு மாறாக நடைமேடை ஒன்றில் நிற்காமல் மைசூர் ரயில் நடைமேடை இரண்டில் வந்து நின்றது .

Advertisment

பின்னர் இரண்டாவது நடைமேடையில் நின்ற ரயில் மீண்டும் முதலாவது நடமேடைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சிக்னல் வழிகாட்டல்களை தவறாக கையாண்டதாக மயிலாடுதுறை ரயில் நிலைய சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சுபம்குமார் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிற்கும் நடைமேடையை மாற்றிக் கூறி பயணிகளை அலைக்கழித்த புகாரையடுத்து ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Mayiladuthurai Officer railway suspended
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe