




தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் திருச்சி மண்டல ரயில்வேயில் வருடாந்திர ஆய்வு பணிகளை நேற்று மேற்கொண்டார். இதில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி மையத்தையும் அதனை சார்ந்த உணவுகங்களையும் திறந்து வைத்தார். மேலும் பயணிகளின் வசதிகளுக்காக வாடகைக்கு e-bike சேவையையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஜங்ஷன் ரயில்வே நிலையம் முகப்பு பகுதியில் பயணிகளை கவரும் வகையிலும் வரவேற்கும் வகையிலும் புதிதாக நிறுவப்பட்ட ‘ஐ லவ் திருச்சி’ என்ற வாட்டர் லோகோவுடன் கூடிய செல்ஃபி பகுதியையும் திறந்து வைத்து அதன் முன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதை தொடர்ந்து ரயில்வே மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே காவலர்களுக்கான பைக்குகளை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆய்வு பணிகளின் போது அவருடன் திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் உடனிருந்தார்.