Advertisment

ரயில்வே ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு...

Railway employee stabbed

Advertisment

கரூர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர், திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள சைக்கிள் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, அங்கு நின்றிருந்த பிரபு மற்றும் அவருடன் இருந்த 2 பேர் கத்தி முனையில் 30 ஆயிரம் பணத்தை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

railway trichy
இதையும் படியுங்கள்
Subscribe