காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று அக்கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்ததால் புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட முத்தரசன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.