ADVERTISEMENT

கர்நாடகா அரசைக் கண்டித்து ரயில் மறியல்; 22 பேர் கைது

10:21 PM Oct 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், நீர் திறந்து விட வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரயில் நிலைய நுழைவு பகுதியில் போலீசார் பேரிங் கார்டு வைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காளை மாட்டு சிலை அருகே தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு கர்நாடகா அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக ஈரோடு ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அங்கு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 2 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT