Skip to main content

'ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு'- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

'Rail platform ticket fare hike'- Southern Railway Notice!

 

தெற்கு ரயில்வே இன்று (29/09/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழாக் காலங்களில் கூட்டத்தைத் தவிர்க்க, சென்னை கோட்டத்திற்குட்பட்ட டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூபாய் 10- லிருந்து ரூபாய் 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

இந்த கட்டண உயர்வானது வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேவின் இத்தகைய அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Train derailment accident in Chennai
மாதிரிப்படம்

சென்னை சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த ரயிலின் எஞ்சின் தண்டாவளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சின் மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நள்ளிரவு 01.15 மணி முதல் அதிகாலை 3 மணிவரை  நடைபெற்றது. ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Next Story

சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து! 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Train derailment incident in Chennai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு இன்று மதியம் 2.30 மணியளவில் பேசின்பிரிட்ஜ் ரயில் பணிமனைக்குச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.