சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையேயான ரயில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திரிசூலம்-மீனம்பாக்கம் இடையேயான பகுதியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தாம்பரம் கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவை பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.