The raider made homemade bomb and lost his fingers

Advertisment

மயிலாடுதுறை அருகே வீட்டில் ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்த நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்து கை விரல்களை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் பாண்டாரவாடை கலைஞர் நகரைச்சேர்ந்தவர் பிரபல ரவுடியான கலைவாணன் (40). இவர் வீட்டில் இருந்தபடியே திருட்டுத்தனமாக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் மீது வெடிகுண்டு வீசி கொன்றது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்தபொழுது எதிராக விதமாக வெடித்து சிதறியது. இதில் ரவுடி கலைவாணனின் இரண்டு கைகளிலும் விரல்கள் துண்டானது. உடனடியாக கலைவாணன் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டை சுற்றி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ரவுடி கை விரல்கள் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.