Advertisment

தயாரிப்பாளர் வீடுகளில் நடைபெற்ற ரெய்டு - 200 கோடி ரூபாய் மறைப்பு; 26 கோடி பறிமுதல்!

ரகத

வருமான வரித்துறையினர் கடந்த 2ம் தேதி தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் வீட்டில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். குறிப்பாகத் தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் அன்புச்செழியன், கலைப்புலி எஸ். தாணு, எஸ். ஆர் பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரின் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினார்கள்.

Advertisment

இன்னும் சில முன்னணி தயாரிப்பாளர்களின் பெயர்களும் இந்த சோதனையில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பான விவரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன் 200 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர்களிடம் இருந்து கணக்கில் வராத 26 கோடி ரொக்கம் மற்றும் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisment

Producers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe