Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.அவரது உதவியாளர் சந்தோஷின் வீடு உட்பட கோவை மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல, எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, கடை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துவருகின்றனர். சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் ஆறு மாவட்டங்களில் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது.