லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும்அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இந்த ரெய்ட்டில் சிக்கியள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில்மொத்தமாக 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் வங்கிக் கணக்கில் உள்ள 6.42 கோடியை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளதாகவும் தற்பொழுது முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.