Advertisment

கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 57 இடங்களில் சோதனை

Raid at KP Anbazhgan house

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இன்று விடியற்காலை 3 மணியில் இருந்து தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. கே.பி. அன்பழகனுக்கு நெருக்கமான பொன்னுவேல், நகரப்பகுதி அனசாகரம் பகுதியில் உள்ள தர்மபுரி அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி, இலக்கியம்பட்டி பகுதியிலுள்ள பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, கே.பி. அன்பழகனின் சித்தப்பா வீடு,பாலக்கோடு மாரண்டஅள்ளி, பொங்களூர், சென்னை நுங்கம்பாக்கம் என மொத்தம் 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், கே.பி. அன்பழகன் வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe