Advertisment

சிட் ஃபண்ட் நிறுவனத்தில் ரெய்டு- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இ.டி

Raid on Gokulam Chit Fund Company - ED reveals shocking information

சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் இந்த சோதனை நடந்தது.

Advertisment

அதில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் இருப்பது வருமான வரித்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சோதனை தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில ஆவணங்கள் கிடைத்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிறுவனத்தின் கிளைகள் கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் இருக்கிறது. கேரளாவை சேர்ந்த கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தின் அலுவலகம், நீலாங்கரையில் உள்ள இல்லம் அதேபோல் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக கேரளாவில் உள்ள இடங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில், கோகுலம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் கணக்கில் வராத 1.5 கோடி ரூபாயை ரொக்கமாகபறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kerala raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe