nn

நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளர் முருகேசன் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 250க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முருகேசன் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளராக பணியாற்றிய பொழுது அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில் முருகேசன் மற்றும் அவரது மனைவி சசிகலா மீது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்வழக்கு பதிவு செய்தது. நேற்று அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். நேற்று காலை 7 மணியிலிருந்து அவரது சொந்தமான வீட்டிலும் வணிக வளாகத்திலும் சோதனை நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.