Advertisment

மூன்றாம் நாளாக தொடரும் சோதனை; 3.5 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

Raid continues for third day; Rs 3.5 crore cash seized

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரி சோதனையில் 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் மூன்றாவது நாளாக சோதனை நடத்தப்பட்டது. ரேஸ்ட்கோஸ்ட் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின்நண்பர் அரவிந்த் என்பவரின் குடியிருப்பு பகுதி ஒன்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அபிராமபுரத்தில் ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் வீடுகளில் 3.5 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வருமான வரி சோதனையானது தொடரும் என்றும் சோதனைக்கு பிறகு முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe