தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில்நான்குநாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் சோதனையானது தொடர்ந்து வருகிறது.
திருவண்ணாமலையில் எ.வ. வேலுவின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அசோக் நகர், தியாகராய நகர், கீழ்பாக்கம், வேப்பேரி பகுதிகளிலும் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் பன்னாட்டு பள்ளி என 40 இடங்களில்சோதனையானது நடைபெற்று வருகிறது. துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.