அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று (15.12.2021) முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரதுஇல்லங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

Advertisment

அதேபோல், அவரது உறவினர்கள், பினாமிகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அவரது மருமகன் கம்பெனி மற்றும் அவரது சம்பந்தி சிவசுப்பிரமணியத்திற்கு சொந்தமான பட்டினப்பாக்க வீடுகள் ஆகியவற்றிலும் சோதனையானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.