Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் நிறுவனத்தில் சோதனை நிறைவு

raid completed at Minister Senthil Balaji friends Institute

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் நிறுவனத்தில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதேபோன்று ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அந்த வகையில் பொள்ளாச்சி அருகே பனப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த்தின் எம்.சாண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. நான்காவது நாளான இன்று சில இடங்களில் சோதனை நடைபெறுவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe