சென்னை வேளாண்மை ஆணையகரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 4 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை வேளாண்மை ஆணையரகத்தில் நேற்றுமுன்தினம் இரவுமுதல் அதிகாலை வரை நடத்திய சோதனையில் இந்த தொகை சிக்கியுள்ளது.சென்னை வேளாண்மை ஆணையரகத்தில்துணை இயக்குனராக பணியாற்றிவந்தசங்கர் என்பவர் வேளாண் அதிகாரிகளிடமும் உரநிறுவன முகவர்களிமும் மாதாமாதம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் நடந்த இந்த திடீர் சோதனையில் தஞ்சை மாவட்ட உதவி வேளாண்மை இயக்குனர் மற்றும் உர நிறுவன முகவர் இருவரிடம் இருந்தும் துணை இயக்குனர் சங்கரிடம் இருந்தும் மொத்தம்3 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});