Skip to main content

கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் மீண்டும் ரெய்டு!  

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

 Raid again in Kandavillas and Siddhanathan  Panchamrta stores!

 

ஏற்கனவே கடந்த மாதம் 29 ஆம் தேதி காலை முதல் பல நாட்களாக கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகள், அந்த இரு நிறுவனங்களின் உரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி, தோட்டத்து வீடுகளில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக மதுரையை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.