Advertisment

14 இடங்களில் சோதனை... லாக்கர் சாவி, ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்!

Check in 14 places ... Locker keys, hard disks confiscated!

Advertisment

கடந்த 15.12.2021 அன்று முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான69 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று (20.12.2021) மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்கள், சேலம் மாவட்டத்தில் ஒரு இடம் என மொத்தம் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திலுள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகம், பி.எஸ்.கே. பெரியசாமி, தீபன் சக்கரவர்த்தி, சண்முகம் ஆகியோரின் வீடுகள், அசோக் குமார் வீடு, சரண்யா நூற்பாலை, எஸ்.எம்.என். கோழிப்பண்ணை, பி.எம். மோகன், பி.எஸ்.கே. கார்டன்ஸ், ஹைலைன் சீனிவாசா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் செந்தில்நாதன், கோபாலகிருஷ்ணன், பாலசந்திரன் வீடுகளில் சோதனை நடந்தது. சேலம் திருவாக்கவுண்டனூரில் தங்கமணியின் நண்பரான குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பல வங்கிகளின் லாக்கர் சாவிகள், லேப்டாப், ஹார்டு டிஸ்க்குகள், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

admk raid thangamani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe