RAHUL GANDHI SPEECH

Advertisment

நாகர்கோவிலில் நடைபெற்றகாங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில்,

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமல்படுத்தப்படும். தொழில் வளத்திற்கான அனைத்து திறமைகளும் தமிழகத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு முற்று புள்ளி வைப்போம்.

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா இரண்டு நாடாக பிரிந்து காணப்படுகிறது. நாட்டில், ஒருபுறம் பணக்காரர்கள் சொகுசாக வாழ்வதும் மறுபுறம் வேலையில்லா திண்டாட்ட நிலையும் உருவாகி உள்ளது.நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை விவசாயிகளுக்கு வருமானம் இல்லை.

Advertisment

33 விழுக்காடு இடஒதுக்கீடு மத்திய அரசு துறையிலே வழங்கப்படும். இங்கு மேடையில் உள்ள தலைவர்கள் அனைவரும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுக்காக்கும் தலைவர்கள். நமது சரித்திரத்தை நரேந்திர மோடி கும்பல் மாற்ற நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதற்காக நாங்கள் 100 சதவிகிதம் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

மோடி தமிழகத்தை மட்டும் நாசம் செய்யவில்லை ஒவ்வொரு மாநிலத்தையும் எதிர்த்து அழித்து வருகிறார். 2019 தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டின் மொழி, கலாச்சாரம் மேடையிலுள்ள தலைவர்களால் காக்கப்படும் என கூறினார்.