Rahul Gandhi said that Don't insult Smriti Irani

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியானஅமேதியில்பாஜக வேட்பாளர் ஸ்மிருதிஇராணிதோற்கடித்தார். அதேபோன்று இந்த முறையும் ராகுல் காந்தியைஅமேதிதொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதிஇராணிசவால் விடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்திஅமேதிதொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியானரேபரேலிதொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதே சமயம்அமேதியில்ஸ்மிருதிஇராணியைஎதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரானகிஷோரிலால்சர்மாவைக் காங்கிரஸ் நிறுத்தியது. பின்னர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதிஇராணியைத்தோற்கடித்துகிஷோரிலால்சர்மா அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதிஇராணி, தொடர்ந்துஅமேதிதொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதிஇராணிக்குஎதிராக சமூகவலைத்தளங்களில்கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதனால் அந்த விஷயத்தில் ஸ்மிருதி இராணிஅல்லது வேறு எந்தத்தலைவர்களையும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.