மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்ராகுல் காந்தி, தொடக்கமாக கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 23ந் தேதி முதல் மூன்று நாள் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடர்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக 25 ஆம்தேதி காலை, கரூரில் பல இடங்களில் மக்களிடம் பேசினார். யாரும் எதிர்பாராத வகையில் வாங்கல் என்ற இடத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி இரட்டை மாட்டு வண்டியைஓட்ட, அதில் ராகுல் காந்தி ஏறி நின்று பயணம் செய்தார். இதை திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன்பார்த்தனர்.
ராகுல் காந்தியின் மாட்டு வண்டிப் பயணமும், அதை காங்கிரஸ் பெண் எம்.பி.ஜோதிமணி ஓட்டியதும் கரூர் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.