Advertisment

ஜீன்ஸ், டீ-ஷர்ட்டில் ராகுல் காந்தி...

rahul gandhi

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடி வருகிறார்.

Advertisment

இதில் மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அவர், பெண்கள் சம உரிமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "வட இந்தியாவை ஒப்பிடும் போது தென் இந்தியாவில் பெண்கள் உரிமையும், பாதுகாப்பும் அதிகமாகவே உள்ளது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்" எனக் கூறினார். இதுபோல மாணவிகள் கேட்ட பல கேள்விகளுக்கு, சளைக்காமல் அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Advertisment

பொதுவாக வெள்ளை குர்தா அணிந்தபடியே ராகுல் காந்தியை பல மேடைகளில் பார்த்திருந்தோம் ஆனால் இன்றைய கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்துவந்தது அனைவருக்கும் வியப்பான ஒன்றாக இருந்தது.

Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe