rahul gandhi election campaign

Advertisment

உங்கள் மனதில் இருப்பதை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தேர்தல் பரப்புரையின் போது காங்கேயம் பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கேயம் காளையை பார்வையிட்டார். அதன்பிறகு காங்கேயத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் ''நான் என் மனதில் இருப்பதை பேச வரவில்லை. உங்கள் மனதில் இருப்பதை தெரிந்துகொள்ள வந்துள்ளேன். தமிழக இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது'' என தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

முன்னதாக ராகுல்காந்தி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.