Skip to main content

பாஜக பெண் நடத்திய தேநீர் கடையில் டீ குடித்த ராகுல் காந்தி!

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

hghhg

 

ராகுல் காந்தியின் 3-ம் நாள் பாதயாத்திரை இன்று காலை 6.40 மணிக்கு நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூாியில் இருந்து தொடங்கியது. காலை 7.40 மணிக்கு தோட்டியோடு பகுதியில் வந்ததும் அவருடன் சோ்ந்து நடந்து வந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆா். பாண்டியனிடம் டீ குடிப்போமா என கேட்ட ராகுல் காந்தி, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சாலையின் இடது பக்கத்தில் உள்ள ஒரு பெண் நடத்தும் டீ கடையின் முன் இருந்த சேரில் உட்கார்ந்தார்.

 

அடுத்து இருந்த மற்ற இரண்டு சேர்களில் பி.ஆா்.பாண்டியனும், ஜோதிமணி எம்.பி யும் உட்காா்ந்தனா். விஜய்வசந்த் எம்.பியும் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ-யும் அருகில் நின்று கொண்டிருந்தனா். டீ கடை பெண்ணிடம் ராகுல் காந்தி டீ கேட்டதும் அந்த பெண் ஒவ்வொன்றாக அடித்து ராகுல் காந்தியிடம் கொடுக்க அவா் மற்றவா்களின் கையில் கொடுத்தாா். பின்னா் ராகுல் காந்தி பிஸ்கட் கேட்டதும் அந்த பெண் பாட்டிலை திறந்து அதிலிருந்து ஒரு பாக்கெட் பிஸ்கட்டை எடுத்து கொடுத்தாா்.

 

பின்னா் டீ குடித்து முடிந்ததும் அந்த பெண்ணிடம் கையை எடுத்து கும்பிட்டு விட்டு மீண்டும் நடைபயணத்தை மேற்கொண்டாா். தொடா்ந்து டீ கொடுத்த அந்த பெண்ணிடம் நாம் பேசிய போது, " நான் டீ கொடுக்கும் வரை அது ராகுல் காந்தினு எனக்கு தொியாது ஏதே ராகுல் காந்தியின் கூட்டத்துக்கு வந்தவா்கள் தான் என்று நினைத்தேன். நான் இதுவரை அவரை பேப்பா் டிவியில் தான் பாா்த்து இருக்கிறேன். இன்னைக்கு தான் நோில் அதுவும் பக்கத்தில் வச்சி பாா்த்ததால் உடனே எனக்கு அவா் ராகுல் காந்தினு தொிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு பாஜக அனுதாபி தான் இருந்தாலும் ராகுல் காந்தியை பாா்க்கும் போது எளிமையாக இருக்கிறாா்" என்றாா்.

 

சார்ந்த செய்திகள்