Advertisment

கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு; ராகுல்காந்தி போராட்டம் 

Rahul Gandhi Denied Entry into Assam Temple

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, நகோன் மாவட்டத்தில் உள்ள படாதிராவதான் கோயிலுக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது, அவரைத்தடுத்து நிறுத்தி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி காவல்துறையிடம் கேட்டபோது, அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெறும் நிலையில், அது முடிந்த பிறகுபிற்பகல் 3 மணிக்கு பின்னரே கோவிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் காந்தி கோவில் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் கோவில் முன்பு திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

AYOTHYA Assam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe