Advertisment

‘வில்லேஜ் குக்கிங்’ சேனலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து!

hjk

தமிழ்நாட்டில் உணவு சமைக்கும் குக்கிங் யூடியூப் சேனல்கள் மிக அதிகம். அதில் மிகவும் பிரபலமானவர்கள் ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல். 5 பேர் கொண்ட இவர்களது சேனலுக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகம். அதிலும் அவர்கள் தமிழை உச்சரிக்கும் முறை மிக அழகாக இருக்கும். ராகுல் காந்தி போனமுறை தமிழ்நாடுவந்தபோது, அவர்களுடன் சேர்ந்து சமையல் செய்த சம்பவம் அப்போது வைரலானது. தமிழ் யூடியூப் சமையல் சேனல்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கொண்ட முதல் சேனல் என்ற பெருமையைத் தற்போது ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல் பெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில், அந்த சேனலைச் சேர்ந்த குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் தந்துள்ளனர். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்துள்ள உயரத்திற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா நிவாரணத்துக்கு உங்களின் பங்களிப்புக்கு வாழ்த்துகள். உங்களை மீண்டும் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe