அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தியை இன்று புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். இந்த சந்திப்பு காலை 10.30 மணி அளவில் நடந்தது.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள், மாவட்டங்களில் நடைபெறுகிற ஆய்வுக் கூட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருநாவுக்கரசர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமாறு ராகுல்காந்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.