Rahul

திமுக தலைவர் கலைஞர் உடலுக்கு கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ராஜாஜி அரங்கத்தில் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி திணறியபடி திமுக தலைவர் கலைஞர் உடல் அருகில் சென்றார். அங்கு அவரின் உடலுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்டாலின் உட்பட கலைஞர் குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.