சிறுவனின் மருத்துவ உதவிக்காக நடிகர் ராகவா லாரன்சை சந்திக்க சென்னை வந்து, முகவரி தெரியாமல் எழும்பூர் ரயில்வே பிளாட்பாரத்தில் தவித்த வந்த ராஜபாளையத்தை சேர்ந்தவர்களின் பரிதாபம் செய்திகளின் மூலம் தெரியவரவே, ராகவா லாரன்ஸ், அவர்களை தனது வீட்டிற்கு காரில் அழைத்து வந்து உதவி செய்தவதாக உறுதியளித்துள்ளார்.

Advertisment

r

ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் சூர்யாவுக்கு பிறந்து சில ஆண்டுகளூக்கு பின்னர் நடக்க முடியாமல் போனது. அதன்பின்னர், பேசவும் முடியவில்லை. சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது. செல்போன் மணி ஒலித்தாலே அதை தாங்க முடியாமல் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டான் சூர்யா.

Advertisment

குருலட்சுமியின் கணவன் பிரிந்து சென்று விவாகரத்து கேட்பதால், அக்காவு குருலட்சுமிக்கு வெங்கடேசன் தான் உதவியாக இருக்கிறார். சகோதரிக்காக தனது திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார். வேங்கடேசனும் குருலட்சுமியும் சூர்யாவை தோளில் சுமந்து பல மருத்துவமனைகளுக்கும் அலைந்து சென்றும் பிரயோசனமில்லை.

r

இந்த நிலையில், சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை பாருங்கள். அவர் மருத்துவ உதவி செய்வார் என்று இவர்களிடம் கூறியிருக்கிறார்கள். இதையைடுத்து சூர்யாவை எப்படியும் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில், மூவரும் சென்னை வந்தனர். ஆனால் அவர்களால் லாரன்சின் முகவரியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. ஊருக்கு திரும்பவும் முடியாமல், சூர்யாவுக்கு சிகிச்சை அளிக்கவும் முடியாமல் கடந்த சில தினங்களாக பிளாட்பாரத்திலேயே தங்கி இருந்தார்கள்.

Advertisment

இவர்களின் இந்த பரிதாப நிலையை செய்திகளின் மூலமாக அறிந்துகொண்ட ராகவா லாரன்ஸ், தனது உதவியாளர் மூலம் அவர்களை தனது வீட்டிற்கு காரில் அழைத்து வந்து, உபசரித்து சிறுவன் சூர்யாவுக்கு தனது அறக்கட்டளை மூலமாக உதவிகள் செய்யப்படும். மேலும், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், அரசை அணுகி உதவி பெற்றுத்தருவோம் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.