ராதாபுரம் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கடைசி மூன்று சுற்றுகளின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளின் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 24 பேர் வாக்குகளை எண்ணும் பணியை மேற்கொள்கின்றனர்.

Advertisment

radhapuram recounting start in high court chennai

கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கடை மூன்று சுற்றுகளின்வாக்குகளும், 204 தபால் வாக்குகளும் மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.