கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில் இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Advertisment

RADHAPURAM ASSEMBLY VOTE RECOUNTING DMK CANDIDATE APPAVU SPEECH

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும் கடைசி மூன்று சுற்றுக்களான 19, 20 மற்றும் 21- வது சுற்றுக்களில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து மீண்டும் தவறாக எண்ணப்பட்டதாக்கூறி தபால் வாக்கு இருமுறை எண்ணப்பட்டது. அதன் பின்னர் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இறுதியாக 07. 49 முடிவுக்கு வந்தது.

Advertisment

RADHAPURAM ASSEMBLY VOTE RECOUNTING DMK CANDIDATE APPAVU SPEECH

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு, வாக்கு எண்ணப்பட்டு முடிவடைந்து உள்ளது. மிகுந்த சந்தோசத்தில் இருப்பதாகவும். வாக்கு எண்ணிக்கை வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பேச முடியாத நிலையில் உள்ளேன் என்றார். மேலும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் பேச முடியாது என்றார்.