Radhakrishnan's car collides with a tourist vehicle

Advertisment

சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்தில் சிக்கியது.

சென்னை பட்டினப்பாக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பத்தில் 18 ஆவதுசுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நொச்சிக்குப்பம் பகுதி மக்கள் அனுசரித்த இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அவர் இப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது சுற்றுலா வாகனம் ஒன்று ராதாகிருஷ்ணன் சென்ற காருடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதனால் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Advertisment

விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த காவல்நிலையத்தில் இருந்த காவல்துறையினர் விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதன் பின் கடற்கரையில் சுனாமியால்இறந்தவர்களுக்காகநினைவஞ்சலி செலுத்தினார்.