Advertisment

உறுப்பு மாற்றுச் சிகிச்சை பெற்ற நபரை நேரில் நலம் விசாரித்த ராதாகிருஷ்ணன்! 

Radhakrishnan interrogates a person who has received an organ transplant!

Advertisment

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, மருத்துவமனையினைப் பார்வையிட்டார். மேலும், நோயாளிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கான பாதிப்புகள் மற்றும் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தும் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து சிறுநீரம் பெற்று உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவரிடம் அவர்நலம் விசாரித்தார். மேலும் அவருடைய உறவினர்களிடம் தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் சிசிக்சைகளையும் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர், கரோனா நோய்த் தொற்று நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் மிக அதிநவீன சிகிச்சைப் பிரிவினையும், ரூபாய் 2 கோடி மதிப்பிலான மார்பகப் புற்றுநோய் கண்டுபிடிக்கக் கூடிய டிஜிட்டல் மேமோகிராம் கருவியின் செயல்பாட்டினையும், ரூபாய் ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஃப்ளோரோஸ்கோபி உபகரணங்களையும் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

இந்நிகழ்வின் போது, அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

hospital trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe